வேலாயுதம் வெற்றி முகம்...
இந்த Anti Vijay Group, , விஜய் ஒழிப்போர் சங்கம்லாம் அப்படியே ஓடிப் போயிரு.. ராசா உள்ள வந்துராதீங்க...


வேலாயுதம் வெறித்தனம்... வேலாயுதம் வெற்றி முகம்.... இந்த ரெண்டுல எதை தலைப்பா வைக்கிறதுன்னு யோசிச்சேன். எதுக்கும் To be on the Safer side வேலாயுதம் வெற்றி முகம்ன்னே வச்சுக்கலாம்.

திரைக்கதை மற்றும் ஜெயம் ராஜாவோட எக்ஸிகியூஷன்ல படம் சூப்பர். படத்தோட முதல் பாதி முழுசும் காமெடிதான். செம சிரிப்பு. லாஜிக் மட்டும் பாக்கலேனா முழுசுமே மாஜிக் தான். மூணு பாட்டு முதல் பாதில. மூணுமே சரியான இடத்துல பர்பெக்ட் பிட். விஜய் மட்டும் எப்படி படத்துக்கு படம் இவ்ளோ இளமையாகிட்டே போறார்னு தெரியல. 39 வயசுன்னா நம்பவா முடியுது? சந்தானம் வழக்கம் போல செம டைமிங்க். கிராமத்துல வர்ற விஜய் அண்ணன் சரண்யா மோகன் தங்கச்சி சீன்லாம் போரடிக்ககல. அங்கங்க காமெடி துணுக்ஸ். கடைநிலை ரசிகர்களுக்காக ஹன்சிகா. யப்ப்ப்ப்பா, கண்ணக் கட்டுது. இன்டெலெக்சுவல் ரசிகர்களுக்காக லூசுப்பொண்ணு ஜெனிலியா. மொத்தத்துல முதல் பாதி ஒரு கலவையா சூப்பர். 95/100.

அப்புறமாதான் இந்த சூப்பர் ஹீரோ கேரக்டர் ஸ்டார்ட் ஆவுது. விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். ஆனா ஒரு டைரக்டரோட ஹீரோவா அந்தக் கேரக்டரும் பர்பெக்ட்தான். சொன்னதைச் செய்திருக்கிறார் விஜய். ஸ்பைடர்மேன் அடிக்கையில் பேட்மேன் பறக்கையில் விஜய்யும் பறக்கலாம் அடிக்கலாம், நாங்கள் ரசிப்போம். வழக்கமான விஜய் படங்களின் பெரிய மைனஸ் வில்லன், கிளை வில்லன், குட்டி வில்லன் என ஏகப்பட்ட வில்லன்களை படம் நெடுக கொல்ல வேண்டியதிருக்கும். இந்த முறை இர(ற)ண்டு பேரோடு முடிந்தது. "மொளச்சு மூணு எலையே விடல" சாங்க் நல்ல மேக்கிங்க்.

தங்கச்சி சென்டிமெண்ட் தாய்குலங்களுக்காக வைக்கப்பட வேண்டி வைக்கப்பட்டு இருக்கலாம். கலாம். லாம். ஆனாலும் ஓ.கே கிளைமேக்ஸ் சீக்வன்ஸ் முழுதுமாகவே எடிட்டிங்க்ல பர பரன்னு கொண்டு போயிருக்காங்க. கிளைமேக்ஸ்ல ஒரு நீளமான டயலாக் சீன். சோசியல் மெசேஜ் சொல்றதுக்காக. அதுல சொசைட்டிக்கு சொல்ற மாதிரி ஒரு டையலாக்...
"கோபப்படுங்க. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ கோபப்பட்டீங்கன்னா
ஆட்சியே மாறுதுல்ல. அப்பப்ப கோபப்பட்டா அரசியலே மாறும்."
ஆட்சியே மாறுதுல்ல. அப்பப்ப கோபப்பட்டா அரசியலே மாறும்."
ஆனா அதெல்லாம் நமக்குத் தேவை இல்ல தலைவா. திரைத்துறைலயே "நல்ல நடிகரா" "Darling of the masses" ன்னு போக வேண்டிய தூரம் நெறைய இருக்கு. வா அப்படியே ஜாலியா போவோம்.
Velayutham – 100% treat for Vijay Audience. 70% Treat for Neutral Audience.






5 பேர் சொன்னது என்னான்னா..:
:))))
chillax
Chillax Chillax Chillax :))
Wel said bro!!!Chilax!!!
itz my revw
http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html
//திரைத்துறைலயே "நல்ல நடிகரா" "Darling of the masses" ன்னு போக வேண்டிய தூரம் நெறைய இருக்கு. வா அப்படியே ஜாலியா போவோம்..//
nice..........................
சூப்பர் படம்
Post a Comment